Asianet News TamilAsianet News Tamil

தப்புமா எடப்பாடி அரசு..? 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அதிமுக ஆட்சி..!

இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்கவைப்பாரா என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.  

The Palanisamy rule is the only victory in 8 constituencies
Author
Tamil Nadu, First Published Mar 10, 2019, 8:33 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்குன் மட்டுமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போதைய நிலையில் 3 தொகுதிகள் காலியாக உள்ளதால் சட்டப்பேரவையின் உறுப்பினர் பலம் 213 ஆக குறைந்துள்ளதால் 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவே உள்ளது. இந்நிலையில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்தால் எடப்பாடி அரசு கவிழ்வது உறுதி. The Palanisamy rule is the only victory in 8 constituencies

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இவர்களில் திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதியும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸும் மறைந்துவிட்டதால், அந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளன. குற்றவழக்கில் தண்டனை பெற்ற ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி பறிக்கப்பட்டதால் அந்தத் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, தற்போது 213 ஆக உள்ளது. சட்டப்பேரவையில், பெரும்பான்மை என்பது, தற்போது உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், சரிபாதியுடன், ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். The Palanisamy rule is the only victory in 8 constituencies

அதன்படி, 214 உறுப்பினர்களை கொண்டுள்ள தற்போதைய பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 109 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவையாக இருக்கிறது. ஆனால், ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங்கலாக, 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், திருவாடானை கருணாஸ் ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர்களையும் டிடிவி தினகரனையும் சேர்த்தால், அந்த அணியில் 5 பேர் மட்டுமே உள்ளனர்.The Palanisamy rule is the only victory in 8 constituencies

திமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 108ல் எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரின் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை.The Palanisamy rule is the only victory in 8 constituencies  

ஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாக வந்துள்ளது. 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் ரிசல்ட் வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 108 உறுப்பினர்களைத் தவிர தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விடுத்து  8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

The Palanisamy rule is the only victory in 8 constituencies

ஆகையால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்கவைப்பாரா என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios