Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை... தொக்காக சிக்கிய பார் உரிமையாளர்.

சென்னை நொளம்பூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்த பார் உரிமையாளர் உட்பட 2 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  

The owner of the bar who broke the lock of the Tasmac store and robbed the liquor bottles.
Author
Chennai, First Published Jun 10, 2021, 9:23 AM IST

சென்னை நொளம்பூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்த பார் உரிமையாளர் உட்பட 2 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை முகப்பேர் மேற்கு கம்பர் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளது. 

The owner of the bar who broke the lock of the Tasmac store and robbed the liquor bottles.

இந்நிலையில் நேற்று திருவள்ளுவர் மாவட்ட கிழக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் சுமதிக்கு, முகப்பேரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபானங்கள் கொள்ளை போனதாக தகவல் கிடைத்தது. உடனே சுமதி சம்பவயிடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே மாவட்ட மேலாளர் சுமதி இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நொளம்பூர் காவல் துறையினர் டாஸ்மாக் கடையின் சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு நபர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. 

The owner of the bar who broke the lock of the Tasmac store and robbed the liquor bottles.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்த, பார் உரிமையாளர் ராஜா தனது கூட்டாளியான குணாவுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து அவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios