The opposition will say something without reason

எதிர்கட்சியினர் அரசியல் செய்ய காரணமின்றி எதை எதையோ கூறி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து மின்தடை நிலவி வருகிறது. இதற்கு காரணம் தமிழக அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை அனல்மின் நிலையத்திற்கு கட்டாதது தான் எனவும் அரசு முறையாக செயல்படவில்லை எனவும் திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது :

தமிழகம் தற்போதுவரை மின்மிகை மாநிலமாக விளங்குகிறது.

எதிர்கட்சியினர் அரசியல் செய்ய காரணமின்றி எதை எதையோ கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற 70 நாட்களில் 1500 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.