திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் காவிரிக்காக போராட வேண்டிய நிலை வந்திருக்கிறது.

காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றார். தமிழகம் அரசு தரும் அழுத்தம் எப்படி இருந்தாலும் அது பாராட்டுக்குரியதுதான் என்றும் கமல் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போராட்டம் தேவைப்பட்டால், கண்டிப்பாக அறிவிக்கப்படும் என்றார். திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கமல் ஹாசன் கூறினார்.