போதுமான ஒற்றுமை இல்லாததால் முப்படைகளை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்லது என அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சென்னை, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த ஆண்டு விளையாட்டு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ராயபுரம் ஒரு சிறிய தொகுதிதான். இந்த பகுதியில் படித்தவர்கள் அதிகம். விளையாட்டு விழாவில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 

20 வருடமாக முப்படைகளுக்குள் போதுமான ஒற்றுமை இல்லாததால் இதனை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்ல விஷயம்தான்.  நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை. மெய் சொல்லும் நாங்கள் கெட்டுப்போவதில்லை.

நீட் தேர்வு மசோதாவிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் தெரிவித்த பின்னரே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். ஜாதி வேற்றுமையை ஒழிக்கவே தமிழக அரசு மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.