Asianet News TamilAsianet News Tamil

களத்தில் குதித்த அனுராதா! நம்பாதிங்க அதெல்லாம் பொய்... சைக்கிள் கேப்பில் அந்தர்பல்டி அடித்தாரா சசி ஃப்ரோ?

The news that I and my son Jayananthi join the EPS team is wrong
The news that I and my son Jayananthi join the EPS team is wrong
Author
First Published Apr 24, 2018, 5:04 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறான ஒன்று என சசிகலாவின் சகோதரர் திவாகரன் விளக்கம் அளித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான ஒருவரை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்தாராம். அவரை சந்தித்த அரை மணிநேரத்தில் திவாகரனும் சந்தித்துப் பேசினாராம். தான் மட்டும் எம்.எல்.ஏவாக இருந்தால் போதும் என நினைக்கிறார் தினகரன்.

The news that I and my son Jayananthi join the EPS team is wrong

18 பேரையும் அவர் தெருவில் நிறுத்திவிட்டார். அவர்களை ஆறுதல்படுத்தும் வேலையை திவாகரன் செய்து வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் பலரும் வழிச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர், சசிகலா சிறையில் இருப்பது தனக்கு சாதகமானது என நினைக்கிறார் என இந்த சந்திப்பில் இந்த பேச்சு நடந்ததாம்.இந்த சந்திப்பை அடுத்து தான்  மாபெறும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம்.

The news that I and my son Jayananthi join the EPS team is wrong

இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும். ஒரு பதிவைப் போட்டார். இத பதிவு தினகரனுக்கு எதிராகவே இருப்பது உறுதிப் படுத்தியது. அடுத்ததாக சின்னம்மாவைச் சிறையில் இருந்து மீட்பேன் என ஜெய் ஆனந்த் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.அதாவது சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்களாம்.அதற்கு, தினகரன் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுத்துவர வேண்டும் என்பதுதான் எடப்பாடி தரப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் என சொல்லப்படுகிறது. அதற்காகத்தான் அப்பாவும் பிள்ளையும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள்.

The news that I and my son Jayananthi join the EPS team is wrong

இதனையடுத்து, எம்எல்ஏக்கள் எல்லோரும் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள் என திவாகரனே வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார். இதற்கு விலையாக திவாகரன் மகனுக்குக் கட்சியில் பொறுப்பு தருவதாக எடப்பாடி தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பில் இருந்தனர்.திவாகரனும், அவரது மகனும் எதிரியோடு கைகோர்க்க ப்ளான் போடுவதை அறிந்த தினகரன், உடனடியாக வெற்றிவேலை வைத்து பக்கா ப்ளான் போட்டனர். அதன்படிதான் நேற்று தினகரனின் மனைவி அனுராதாவை சந்தித்து பேசியிருக்கிறார்.

The news that I and my son Jayananthi join the EPS team is wrong

அப்போது அறிக்கையாக வெளியிடட்டுமா? என கேட்க. அதற்கு அனுராதாவோ  , 'அறிக்கையாக வெளியிட்டால், சசிகலா குடும்பத்தில் சண்டை வெடித்துவிட்டது என மீடியாவில் ரைண்டடிக்கும் அதனால், உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் சொல்லிடுங்க அதான் சரியாக இருக்கும், என சொல்ல, அடுத்ததாக அதில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பதையும் அனுராதாவே சொல்லியிருக்கிறார்.இதனையடுத்தே வெற்றிவேல் களத்தில் இறங்கினார்.ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு வந்த நிலையில், நிலைமையை புரிந்து கொண்ட திவாகரனோ நானும் எனது மகன் ஜெயானந்தும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறான ஒன்று என அந்தர்பலடி அடித்துள்ளது அதிமுக மற்றும் அமமுக நிவாகிகளுக்கிடையே மன்னார்குடி குடும்பத்தில் அப்படி என்னதான் நடக்கிறது என குழப்பத்தில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios