தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகி உள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார். 

நிர்வாக வசதிகருதி விழுப்புரம் மாவட்டத்தை பிரிந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு இந்த மாவட்டம் செயல்பட உள்ளது. ஏற்கெனவே  வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் என்றும் நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் என்றும் மேலும் பிற பகுதிகளை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க பல பகுதிகளில் கோர்க்கை எழுந்து வருகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி வருகிறது. 

இதற்கு முன் இறுதியாக கோயம்புத்த்தூரை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது அவரை 32 மாவட்டங்களாக இருந்த தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகி உள்ளது. திருப்பூ மாவட்டம் உருவாவதற்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கத்தில், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்ததாகவும், நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.