மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள முடிச்சுகள் இன்னும் அவிழவில்லை. அவரது மரணத்திற்கு இது தான் காரணம் என அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய குண்டை வீசியிருக்கிறார். 

’’ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் போதாது. அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணடு வர வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமலும், ஆஞ்சியோகிராம் செய்யவிடாமலும் தடுத்தது யார் என்பதை ஆணையம் விவசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். அவர் சிகிச்சை பெற்ற போது அவரை பார்க்க எங்களை யாரும் அனுமதிக்கவில்லை. மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்’’ என அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வரும் நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகம் இப்படிப்பேசி இருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.