கடந்த சில நாட்களாக இணைப்பு பற்றி வதந்திகள் இறைக்க கட்டி பறப்பதாகவும், ஈபிஎஸ் அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ஒபிஎஸ் அணியின் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் திரும்பினார்.

இதனால் எடப்பாடி அமைச்சரவை தினகரனை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் ஒபிஎஸ் அணி கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும், இதுவரை எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

ஆனாலும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணையும் என அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தலைமை கழகம் சென்று கட்சி பணிகளை ஆற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒபிஎஸ் அணியின் மைத்ரேயன் எம்.பி., தனது முகநூல் பக்கத்தில், கடந்த சில நாட்களாக இணைப்பு பற்றி வதந்திகள் இறைக்க கட்டி பறப்பதாகவும், ஈபிஎஸ் அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் அரசு எனவும், இது ஜெயலலிதா அரசு இல்லை எனவும், குறிப்பிட்டுள்ளார்.  

ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவுன் தெரிவித்துள்ளார்.