Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாதிகளுக்கு துணை போகும் எம்பியை கைது செய்யவேண்டும். கொந்தளிக்கும் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா.!

ராமநாதபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் அருண் பிரகாஷின் வீட்டிற்கு வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

The MP who is going to support the extremists should be arrested. BJP leader H. Raja in turmoil!
Author
Tamil Nadu, First Published Sep 5, 2020, 9:30 AM IST

ராமநாதபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் அருண் பிரகாஷின் வீட்டிற்கு வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஹெச்.ராஜா..
"கடந்த 20 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துமத பிரமுகர்கள் கொல்லப்படும் சம்பவங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஜவாஹிருல்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The MP who is going to support the extremists should be arrested. BJP leader H. Raja in turmoil!

மேலும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய 'நவாஸ்கனி' பயங்கரவாத சக்திகளுக்கு ஆதரவு தந்து வருவதால் அவர் பதவி விலக வேண்டும். காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இங்கு இருந்து இயங்குகிறார்கள். மத பிரச்சார பணியை செய்து வருகிறார்கள். இவர்களின் விசா காலம் முடிந்த பின்னும் சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளனர்.

இவர்களை கைது செய்தால், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி உடனே அவர்களை விடுதலை செய்யக் கூறுகிறார். இப்படிப்பட்ட நவாஸ்கனி ஏன் கைது செய்யப்படவில்லை. அருண் பிரகாஷ் கொலை வழக்கின் விசாரணையை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹெச். ராஜா கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios