Asianet News TamilAsianet News Tamil

மொத்த பிரச்சனைக்கும் மோடி அரசுதான் காரணம்.. விரட்டி விரட்டி அடிப்போம்.. திருமாவளவன் பகிரங்க எச்சரிக்கை.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், இல்லையென்றால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்தார்

.  

The Modi government is responsible for the whole problem .. Thirumavalavan warning.
Author
Chennai, First Published Jun 30, 2021, 12:33 PM IST

கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், இல்லையென்றால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை  ஈவேரா சாலையில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் எதிரே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மூன்றாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

The Modi government is responsible for the whole problem .. Thirumavalavan warning.

மேலும் இருசக்கர வாகத்திற்கு மாலை அணிவித்து மேளம் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர். பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை, கொரோனா நிவார நிதியுதவியாக தலா ஒரவ்வொரு குடும்பத்தினருக்கும் 7500 வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு அதற்கான போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

The Modi government is responsible for the whole problem .. Thirumavalavan warning.

தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டாமல் போதிய தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு உடனடியாக மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணற்றில் தள்ளியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டுகளுடன் தொடர்ந்து கலத்தில் இணைந்திருந்து தீய சக்திகளை துரத்தி அடிப்போம் என அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios