Asianet News TamilAsianet News Tamil

திமுகவை ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு; செயற்குழுவில் அதிர்ச்சி பேச்சு!!!

திமுகவை ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு என செயற்குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார். 

The Modi government is looking to Eradicate the DMK
Author
Chennai, First Published Aug 14, 2018, 1:05 PM IST

திமுகவை ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு என செயற்குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார். The Modi government is looking to Eradicate the DMK

அப்போது அறிஞர் அண்ணா மறைந்த போது, அண்ணாவிற்கு பிறகு திமுக இருக்காது என பலர் கூறினர். ஆனால் கருணாநிதி கட்சியை கட்டுக்போப்புடன் வழிநடத்தி வந்தார். 1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 184 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக அழிக்க முடியாத சக்தியாக கருணாநிதி உருவாக்கினார்.The Modi government is looking to Eradicate the DMK

இன்றைக்கு நாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறோம். மத்திய அரசு ஒருபக்கம் நம்மை ஒழிப்பதற்கும், நமது இயக்கத்தை பிளப்பதற்கும் திட்டம் தீட்டிக் கொண்டுள்ளனர். கருணாநிதி மிகவும் விரும்பிய மாநில சுயாட்சியை நாம் மீட்டெடுத்தாக வேண்டும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை எதிர்கொள்ள முடியுமா என பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது.

 The Modi government is looking to Eradicate the DMK

நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா வகுத்து தந்த கொள்கைகளை இறுதிமூச்சு அடங்கும் வரை கருணாநிதி செயல்படுத்தினாரோ அதேபோல, அடுத்த தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். இந்த சாதனையை நாம் நிகழ்த்தியாக வேண்டும் என சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios