Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை ஏன் நீக்க வேண்டும்... - வாண்டடா வந்து சிக்கும் அறந்தாங்கி எம்.எல்.ஏ...!!!

The MLA Rathin Sabha chose to be quoted as saying that he would be able to lead the party and the Dikhi and Dtivi who have been in the pipeline.
The MLA Rathin Sabha chose to be quoted as saying that he would be able to lead the party and the Dikhi and Dtivi who have been in the pipeline.
Author
First Published Aug 25, 2017, 2:57 PM IST


சசிகலாவும் டிடிவி தினகரனுமே கட்சியை வழிநடத்துவார்கள் எனவும், பன்னீர்செல்வத்தையே சேர்த்து கொண்ட எடப்பாடி சசிகலாவையும் டிடிவியையும் சேர்த்து கொள்ள தயங்குவது ஏன் என அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதிகேள்வி எழுப்பியுள்ளார். 

எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சி நிலைப்பதற்காகவும் கட்சியையும் சின்னத்தையும் மீட்பதற்காகவும் பன்னீர்செல்வத்துடன் கூட்டணி வைப்பதென்று முடிவெடுத்தார். மேலும் டெல்லி தலைமையிடமும் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. 

இதைதொடர்ந்து ஒபிஎஸ் அணியின் கோரிக்கைகளை ஏற்று இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. ஆனால் விரைவில் சசிகலாவை பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என வைத்தியலிங்கம் அறிவித்தார். 

இதையடுத்து 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். 
தொடர்ந்து புதுச்சேரி  கடற்கரையை ஒட்டியுள்ள சின்னவீராம்பட்டினம் அருகே உள்ள தி விண்ட் பிளவர் என்ற ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் கடந்த 4 நாட்களாக எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இதனிடையே எடப்பாடி தரப்பில் இருந்து வெளியே வந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

மேலும் செய்தியாளிடம் பேசும்போது, அனைத்து எம்.எல்.ஏக்களையும் கலந்து பேசவில்லை எனவும், சசிகலாவே பொதுச்செயலாளர் எனவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து சபாநாயகர் தரப்பில் இருந்து 19 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, சசிகலாவும் டிடிவி தினகரனுமே கட்சியை வழிநடத்துவார்கள் எனவும், பன்னீர்செல்வத்தையே சேர்த்து கொண்ட எடப்பாடி சசிகலாவையும் டிடிவியையும் சேர்த்து கொள்ள தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios