குழந்தை திருமணம் செய்தேன் என கூறிய ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
இரவு வந்தால் நிம்மதியாக தூங்கலாம் என்றால் அதையும் மோடி அரசு இரவு நேர மின் கட்டணத்தை அறிவித்து, மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீட்சிதர் வீட்டில் குழந்தை திருமணம்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் கோயிலில் தீட்சதர் வீட்டு சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விஷயத்தில் தலையிட்ட போலீசார் தீட்சிதர்களை கைது செய்தது. தொடர்ந்து குழந்தை திருமணம் செய்த சிறுமிகளிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர் ரவி 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
எனக்கும் குழந்தை திருமணம் தான்
அப்போது மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்க பலமாக இருந்தார். உலகில் தான் எங்கு சென்று திரும்பினாலும் எனது மனைவிதான் எனது பலம். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஆளுநர் ரவி குழந்தை திருமணம் செய்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மீது நடவடிக்கை
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், கொடூரமானது என்னவென்றால், தானே குழந்தை திருமணம் செய்து கொண்டேன் என ஆளுநர் ரவி பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என்றால், அது எப்படி நியாயமாக இருக்கும், அவர் மீது ஏன் ஒழங்கு நடவடிக்கை எடுக்க கூடாது. 10 வருடங்களுக்கு முன்பு கொலை செய்தேன் என்று இப்போ சொன்னால் அது சட்டப்படி தப்பு ஆகாதா என கேள்வி எழுப்பினார். எனவே குழந்தை திருமண தடை சட்டத்தின் மீது அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்