தங்களது திட்டங்களையும், செயல்பாடுகளையும் திமுக எதிர்ப்பதால் பாஜகவின் அடுத்த குறி திமுக தலைமை மீது பாய்ந்திருக்கிறது. ஐ.என்.எக்ஸ். நிறுவன விவகாரத்தில் சிபிஐயால் கைதான காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தாலும்,  அமலாக்கப் பிரிவின் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீவிரம் காட்டி மீண்டும் கைது செய்து அவரை மனரீதியாக துன்புறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

திகார் சிறைக்கு போய்விடகூடாது என கவனமாய் இருந்த ப.சிதம்பரத்தை வெளியே விடாமல் தடுத்து வைத்துள்ளது பா.ஜ.க.  அதே அதிகாரத்தை காட்டி இப்போது மு.க.ஸ்டாலினை மடக்கக் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 

மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனைத்தான் முதலில் கண்காணித்து வந்த பாஜக தற்போது சபரீசனோடு படித்து இப்போதும் நட்பில் இருப்பதாக கூறப்படும் சர்வேஸ் என்ற காவல்துறை அதிகாரியை மத்திய புலனாய்வு அமைப்புக்கு அழைத்துக் கொண்டது டெல்லி. பின்னர் சபரீசனின் ஓ.எம்.ஜி. குழுவில் இருந்த சர்வேஸின் தம்பி தூக்கிக் கொண்டுபோன அதிகாரிகள் டீம், ‘’மு.க.ஸ்டாலின் பணம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மூலம் எவ்வாறு  முதலீடு செய்யப்படுகிறது போன்ற கேள்விகளை எழுப்பி அவரைத் துருவிக்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர்.

 
 
இதன் மூலம் திமுகவை அடக்கி வைக்க கடிவாளம் தேடிக் கொண்டிருக்கிறது பாஜக தலைமை. இந்த விஷயங்களை அறிந்த திமுக அதிர்ச்சியாகிக் கிடக்கிறது.