வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன் கட்சியுடன் சேர்ந்து தானும் தோல்வி அடையும் வகையில் தமிழக மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள்  என பாஜக ஊடகபிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தேசவிரோத சக்திகளின் துணையோடு,  தமிழின விரோத சக்திகளின் பின்னணியில், இந்து மத விரோத தீய பிம்பமாய் செயல்பட்டு GoBackModi என்று சொல்லி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்த ஊழல் இளவரசர் ஸ்டாலினுக்கு ‌ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன் கட்சியுடன் சேர்ந்து தானும் தோல்வி அடையும் நோக்கில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மாநிலத் தலைவர் டாக்டர் முருகன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் வழிகாட்டுதலில் கொளத்தூர் தொகுதி நிச்சயமாக தாமரை சட்டமன்ற தொகுதியாக மாறும். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயமாக கொளத்தூர் தொகுதி மக்களால் புறக்கணிக்கபடுவார். பாஜக வின் தீவிரமான பிரச்சாரம் மூலம் திமுகவின் முகமூடியை, ஸ்டாலினின் இந்து விரோத, மக்கள் விரோத போக்கை மக்களிடையே கொண்டுச் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை தோற்கடிப்போம். 

இந்த உறுதியுடன் தேர்தல் பணியை துறைமுக பகுதியில் உள்ள  காளிகாம்பாள் கோவிலில் தமிழகத்தை திமுகவிடமிருந்து மீட்டெடுப்பதற்கு தெய்வீகம், தேசியம் காப்பாற்றுவதற்கு ,சிறப்பு பூஜை செய்து பணிகள் தொடங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.