தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அதிகாரிகள் உடனான ஆலோசனையின் போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்;- தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல. பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தான் தற்போது நடைபெறுகிறது. பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.