அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்..!! என்ன தான் சொல்லுகிறது.
மக்கள் கொடுத்த வாய்ப்பை அனுபவிக்க முடியாமல் மரணமடைந்தார். அந்த ஆட்சி ஒபிஎஸ் தலைமையில் கொஞ்ச நாளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் காலம் முடிய இன்னும் ஓராண்டுகள் இருக்கிறது. எடப்பாடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் 2020-21 ஆகும். இந்த நிலையில் மக்கள் எதிர்பார்த்த மானியங்கள் தள்ளுபடிகள் இல்லாத பட்ஜெட்
By: T.Balamurukan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க மக்கள் கொடுத்த வாய்ப்பை அனுபவிக்க முடியாமல் மரணமடைந்தார். அந்த ஆட்சி ஒபிஎஸ் தலைமையில் கொஞ்ச நாளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் காலம் முடிய இன்னும் ஓராண்டுகள் இருக்கிறது. எடப்பாடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் 2020-21 ஆகும். இந்த நிலையில் மக்கள் எதிர்பார்த்த மானியங்கள் தள்ளுபடிகள் இல்லாத பட்ஜெட்டை அறிவித்திருக்கிறர் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ்..
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வரிவிதிப்பு பங்கில் வழங்க வேண்டிய தொகை கடந்த ஆண்டு சுமார் 34 ஆயிரம் கோடி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இந்தாண்டு 26396 ஆயிரம் கோடி என அறிவித்திருப்பது கடும் வீழ்ச்சியாக இருக்கிறது.
பசுமை வீடு 500 கோடி. சுpதம்பரத்தில் இயங்கிவந்த அண்ணாமலை பல்கலைகழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். அந்த பல்கலைக்கழகம் கடலூரில் மருத்துவ கல்லூரியாக செயல்படும். பொண்கள் பாதுகாப்பு நிர்பயா திட்டத்திற்கு 71 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக்கட்டணம் சலுகைரு506 கோடி. தூத்துக்குடியில் பெட்ரோலியம் ஆலை49000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடியில் உலக்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 12 அமைக்கப்படும் . நெல்லையில் உணவு பூங்கா. அம்மா உணவகத்துக்கு 100 கோடி. சென்னை சிட்லபாக்கி ஏர்p சிரமைக்க ரூ 25கோடி.சென்னை கூடவம் அடையாது பக்கிங்காம் கால்வாய்கள் சீரமைக்க 5439 கோடி. சுற்றுலாத்துறை வளர்ச்சி ரூ536 கோடி நகர்புற வளர்ச்சி திட்டம் ரூ5306 கோடி.இதில் சென்ளை மதுரை திருச்சி கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கு மானியமாக வழங்கப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ3099கோடி.
காவேரி குண்டாறு திட்டத்திற்கு 700 கோடி. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு 500கோடி. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மவட்டதில் தொழில் போட்டை. தூத்துக்குடியில் கடல் அரிப்பு சுவர் 30 கோடி.நாகை ஆறுகாட்டாற்றுதறையில் துறைமுகம.; இராமேங்வரத்தில் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும். திருநெல்வேலி கங்கை கொண்டானில் 77 கோடியில ;உணவு பூங்கா. ரூ34181 கோடியில் பள்ளிக்கல்விதுறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமிரா அமைக்க 75 கோடி. இந்தாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 2.8 சதவீதம். நடப்பாண்டு தொழில் வளர்ச்சி 7.27 சதவிதமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் ஓபிஎஸ்.
By: T.Balamurukan