the kiranbedi mood is not correct by evks ilangovan
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு மனநிலை சரியில்லை எனவும் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டியவர் எனவும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பணிகளில் ஆளுநர் கிரண்பேடி அதிகமாக தலையிட்டு வந்ததால் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே புதுச்சேரி சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார்.
இதையடுத்து சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
அதன்படி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு புதிய அதிகாரியாக கணேசனை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா நியமித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலாளர் பிரபித்த உத்தரவை ரத்து செய்வதாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.
இதனால் ஏற்கனவே லேசாக கசிந்து வந்த மோதல் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
கிரண்பேடி மனநிலை பாதித்தவர் போல் செயல் படுகிறார். கீழ்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டியவரை பிரதமர் மோடி புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டார்.
எத்தனை கிரண்பேடிகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நாராயணசாமியை ஒன்றும் செய்ய முடியாது.
புதுவை மக்களின் பலத்தோடு நாராயணசாமி இவற்றை சமாளிப்பார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். தேர்தல் கமிஷனுடைய செயல்பாடு திருப்தியாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
