Asianet News TamilAsianet News Tamil

இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படும். மோடி உறுதி.

இலங்கை தலைவர்களோடு, தமிழர்கள் உரிமைகள் குறித்து நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறோம், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றோடு அவர்கள் வாழ்வதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம்

The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.
Author
Chennai, First Published Feb 14, 2021, 4:13 PM IST

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நெடுநாளைய ஆசையாக இருந்து வருகிறது, வரும் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து பாஜக சந்திக்கிறது. முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார், இந்நிலையில் ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வருகை தந்த பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:  

The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.

நண்பர்களே அண்டைநாடான இலங்கையில் உள்ள நம் தமிழ் சகோதர சகோதரிகள் நலன்களில் நமது அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்திய பிரதமர் என்ற கௌரவத்தை நான் பெற்றிருக்கிறேன். பேச்சுவார்த்தையின் வாயிலாக இலங்கை தமிழ்ச் சமூகத்தின் நலன்களை உறுதி செய்து வருகிறோம். கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட ஆதரவுகளை விட மிக அதிகமாக மற்றும் நமது அரசாங்கம் தமிழர்களுக்கு அளித்து வருகிறது. 

வடகிழக்கு இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், தோட்டப் பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள் சுகாதார விஷயத்தில் நாம் ஒரு இலவச அவசர கால ஊர்தி சேமிப்பு நிதி வழங்கியிருக்கிறோம். இந்த சேவையை தமிழ் சமூகத்தால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருகோணமலையில் ஒரு மருத்துவமனையும் நம்மால் கட்டப்பட்டுள்ளது யாழ்பாணத்திற்கும்- மன்னாருக்கும் இடையிலான ரயில் தடம் நிறுவப்பட்டு வருகிறது, சென்னைக்கும்- யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.

விரைவிலேயே திறக்கப்பட உள்ள யாழ்பாண கலாச்சார மையத்தை இந்தியா கட்டிக் கொடுத்திருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இலங்கை தலைவர்களோடு, தமிழர்கள் உரிமைகள் குறித்து நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறோம், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றோடு அவர்கள் வாழ்வதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம். 

நண்பர்களே நாம் மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் நெடுங்காலமாக இருந்து வருகிறது, பழைய வரலாறுகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை, ஆனால் நம் மீனவர்களின் நியாயமான உரிமைகளை என் தலைமையிலான அரசு உறுதியாக பாதுகாக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். இலங்கை அரசால் எப்போது கைது செய்யப்பட்டாலும் அவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவது உறுதி செய்துள்ளோம்.

 The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.

எங்கள் ஆட்சிக்காலத்தில் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள், தற்போது இந்திய மீனவர்கள் யாரும் இலங்கை சிறைகளில் இல்லை, அதேபோல 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.   

 

Follow Us:
Download App:
  • android
  • ios