தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது.. தள்ளுமுள்ளு, போலீஸ் தடியடி, மறியல், கைது, விடுவிப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் போராடிய பெண்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தக் கலவரத்தில்  முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். 

 

இந்த சம்பவம் குறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்

 

1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம். தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார். அதர்மம் தலைவியித்தாடுகிறது. சீனாவின் அணுகுமுறை இங்கும் வரவேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.