தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக - திமுக என்ற நிலை மாறி, தமிழகத்தில் பாஜக - திமுக என்ற நிலை மட்டுமே தொடரும். திமுகவிலிருந்து பாஜகவிற்கு ஏராளமானவர்கள் வர இருக்கிறார்கள் என சமீபத்தில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு மாறிய நிர்வாகி வி.பி.துரைசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ’’பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே வி.பி.துரைசாமி அப்படி கூறியுள்ளார். 

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். திமுக எம்.பி கனிமொழி இந்திய அளவில் பிரபலமானவர். அனைவருக்கும் அறிமுகமானவர். அவரை டெல்லி விமான நிலையத்தில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் அதுபோல விசாரித்திருக்க வாய்ப்பு இல்லை. அரசியல் செய்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை கனிமொழி பதிவிட்டுள்ளார். இ.பாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.