எப்போதும் பிரியாணி உண்ண விரும்பும் சந்திரமோகனுக்கு அவரது உறவினர்கள் பிரியாணி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கத்தை விட அவர் அதிகமாக பிரியாணி சாப்பிட்டுள்ளார். .
இரவில் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளைஞர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்கு இரு தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த தலத்தெரு பேட்டையைச் சேர்ந்த சந்திரமோகன் (30) என்ற இளைஞருக்கு 26 ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

எப்போதும் பிரியாணி உண்ண விரும்பும் சந்திரமோகனுக்கு அவரது உறவினர்கள் பிரியாணி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கத்தை விட அவர் அதிகமாக பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் சுயநினைவு இல்லாத நிலையில் சந்திரமோகன் இருப்பதை பார்த்து அவரது தாயார் எழுப்பியபோது, அவர் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், கூக்குரலிட்டு அழைத்த அவரது தாய், அவசர அவசரமாக காரைக்கால் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் சந்திரமோகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.

அதைக்கேட்ட அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து நடைபெற்ற உடற்கூறு ஆய்வில் உணவு குடல் மற்றும் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சந்திரமோகன் உயிரிழந்திருப்பது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. அவர் சாப்பிட்ட பிரியாணியில் நச்சு ஏதும் கலந்து உள்ளதா, சந்திரமோகன் இறப்புக்கு காரணம் என்ன, என்பது இறுதி உடற்கூற்று ஆய்விலேயே தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது. இரவில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம், பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
