காவிரி மீட்பு பயணத்தின் இன்று நான்காம் நாளாக திருவாரூரில் தொடங்கிய ஸ்டாலின் மாட்டு வண்டியில் பயணித்து தொண்டர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காட்டி வருகிறார்.கடந்த 7ஆம்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கிய அவர் அடுத்ததாக தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றது.

மூன்றாவது நாளான நேற்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார்.
பயணத்தின் 4வது நாளான இன்று திருவாரூரில் மு.க.ஸ்டாலின் தனது தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தொடர்ந்து திருவாரூர் நகர வீதிகளில் நடந்து சென்றார்.

முதலில் நடந்து சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டிச்சென்று மாஸ் காட்டினார். ஸ்டாலின் பயணிக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் இடங்களில் பேசுகிறார். அவருடன் கட்சியினரால் செல்லமாக இளைய தளபதி என அழைக்கப்படும் உதயநிதியும் பயணம் செய்கிறார். மாணவர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.