ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், தமது உடல் நிலை மற்றும் நாட்டினுள் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, தன்னால் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை; இந்த முடிவு தம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும், மன்னியுங்கள் என்று அறிவித்து, கொடுத்த வாக்கை காப்பதற்காக அரசியலுக்கு வந்து தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று தாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர வலியுறுத்த, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு முன்பாக,  முருகேசன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தார். அவரை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.