Asianet News TamilAsianet News Tamil

ஹஜ்க்கு 2 லட்சம் இஸ்லாமியர்களை அனுப்பி மோடி சாதனை...!! கூடுதலாக 1000 கோடியை கேட்டுள்ளது ஹஜ் கமிட்டி...!!

இதன்மூலம்  பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறிஸ்தவ, இஸ்லாமிய,ஜெயின்,சிங்,பார்சிய சமூகம் சார்ந்த சிறுபான்மை மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒரு உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களுடைய பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதை சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்

the historical first time, 2 lakhs  Muslims send pilgrims for haj by modi government
Author
Chennai, First Published Aug 31, 2019, 1:50 PM IST

வரலாற்றிலேயே முதல் முறையாக  இந்தியாவில் இருந்து 2 லட்சம் இஸ்லாமியர்களை ஹஜ்க்கு புனித பயணம் அனுப்பிய பெருமையை  மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெற்றுள்ளது.  இது தொடர்பாக  ஹஜ் கமிட்ட தலைவர் அபூபக்கர் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளதுடன் சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென  கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து தகவல் தெரிவித்த அவர்the historical first time, 2 lakhs  Muslims send pilgrims for haj by modi government

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு  2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஹஜ் செல்வதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து போதுமான அளவுக்கு விமானசேவை ஏற்படுத்திக் கொடுத்து சவுதியில் அவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள்,  அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் செய்து தரப்பட்டது. the historical first time, 2 lakhs  Muslims send pilgrims for haj by modi government

இத்தகைய சிறப்பான ஒரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தமைக்கு மத்திய பாஜக அரசுக்கும் பிரமருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அத்துடன்  மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டேன் என்றார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தை பொறுத்த வரையில், மேலும் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.the historical first time, 2 lakhs  Muslims send pilgrims for haj by modi government

இதன்மூலம்  பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறிஸ்தவ, இஸ்லாமிய,ஜெயின்,சிங்,பார்சிய சமூகம் சார்ந்த சிறுபான்மை மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒரு உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களுடைய பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதை சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அமைச்சரும் அதற்கு சம்மதம் தெரிவித்து கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும்  அபூபக்கர் கூறினார். அப்போது மத்திய அமைச்சரை தமிழகத்திற்கு வர வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் அபூபக்கர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios