ஜெயலலிதா மரணித்ததர்க்கு முதல் நாள் அதாவது  டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் ஜெய் வீர ஹனுமான் சீரியல் பார்த்தார் அப்போது திடீரென அவர் படுக்கையில் சாய்ந்தார் என 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதிவரை என்னென்ன நடந்தது? மற்றும் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களை   55 பக்கங்களில் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதில், செப்டம்பர் 21ஆம் தேதி முதலே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் விழாவில் மெதுவாக நடந்து வந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்த அவர், 22ஆம் தேதியன்று சோர்வாக காணப்பட்ட அவர் அன்று தலைமை செயலகம் செல்லவில்லை அன்று வீட்டிலேயே பைல் பார்த்துள்ளார்.

இரவு 9 மணிக்கு மேல் அவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. அப்போது பாத்ரூமில் மயங்கி விழுந்துள்ளார். உடனே தனது உறவினரான டாக்டர் வெங்கடேஷுக்கு போனில் அழைத்துள்ளார். அப்போது வெங்கடேஷ் உடனே அப்பல்லோவிற்கு போன் போட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோவிற்கு எடுத்து சென்றோம். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு நினைவு திரும்பியது என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை சீரானது. 22ஆம் தேதியே சில பைல்களைப் பார்த்தார். 27ஆம் தேதி காவிரி விவாகாரம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மீண்டும் உடல்நிலை மோசமானதால் “எம்டிசிசியு” அறைக்கு மருத்துவர்கள் மாற்றினர். 

ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருந்தது. நலமாகவே ஓய்வெடுத்து வந்தார். இன்னும் சில நாட்களில் வீட்டிற்கு செல்வதாக இருந்தோம். அப்போது டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் அவர் ஜெயா டிவியில் “ஜெய் வீர ஹனுமான்” சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு காபி கொடுக்கப்பட்டது. ஆனால் அவரோ சீரியல் முடிந்த பின்னர் குடிக்கிறேன். என படுக்கையில் படுத்தபடியே சொன்னார். பிறகு அவர் சீரியல் முடிந்த பின்னர் காபி குடிப்பதற்காக கையில் வாங்கினார். அப்போது கை நடுங்கியது. வலிப்பு ஏற்பட்டது போல உடல் வெட்டியது. அப்போது டாக்டர்கள் சிகிச்சை செய்தனர். நான் அக்கா...அக்கா...என்று கத்தினேன்.

தொடர்ந்து என்னை மருத்துவர்கள் வேகமாக கத்த சொன்னார்கள். நான் கத்தி அழைத்தேன் ஜெயலலிதாவின் கண்கள் திறந்தன, ஆனால் சில நொடிகளின் மீண்டும்  மூடிக்கொண்டன என ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களை  சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.