The GST legislation passed in the Legislative Assembly July 1 comes into force

தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியதையடுத்து வருகிற 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு திட்டம் தீட்டியது.

இதற்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் போது அதன் மீதான கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பல வரிகள் விதிக்கபடுவது வழக்கம்.

இதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல வித மறைமுக வரிகளை ஒன்றிணைத்து சீர்ப்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசின் நிதியமைச்சகம் எடுக்க ஆரம்பித்தது.

இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஜி.எஸ்.டியின் 4 மசோதாக்களுக்கும் மாநிலங்களவை ஒப்பதல் அளித்தது. இழப்பீட்டை ஈடு செய்யும் ஜி.எஸ்.டி மசோதா திருத்தம் ஏதுமின்றி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனால் வரும் 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி சட்டம் அமலுக்கு வருகிறது.