துண்டை போட்டு மீன் வியாபாரம் செய்வது போல் ஒபிஎஸ் கையையும் இபிஎஸ் கையையும் பிடித்து சேர்த்து வைக்கிறார் ஆளுநர் எனவும், அதிமுக விவகாரத்தில் அவர் அரசியல் செய்கிறார் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அதிமுக சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்த போது பன்னீர்செல்வம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதற்கு ஆளுநர் உத்தரவிட்டதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், எடப்பாடி 122 எம்.எல்.ஏக்களின் சப்போர்ட்டில் வெற்றி பெற்றார். 

ஆனால் தற்போது டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்தும் இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் தன்னை சந்திக்க வந்த எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்த தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், ஜவஹீருல்லா, முத்தரசன் ஆகியோரிடம் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளார் ஆளுநர். 

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த ஸ்டாலின், துண்டை போட்டு மீன் வியாபாரம் செய்வது போல் ஒபிஎஸ் கையையும் இபிஎஸ் கையையும் பிடித்து சேர்த்து வைக்கிறார் ஆளுநர் எனவும், அதிமுக விவகாரத்தில் அவர் அரசியல் செய்கிறார் எனவும் தெரிவித்தார். 

மேலும், சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடுவது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு எதிர்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.