செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன்.? முதல்வருக்கு ஆளுநர் எழுதிய 5 பக்க பரபரப்பு கடிதம்
ஜூன்15ல் செந்தில்பாலாஜியின் இலாகாக்களை மாற்ற கோரிய போதும், உடல்நிலை மட்டுமே காரணமாக சொல்லப்பட்டது. அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிடவில்லையென ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை நீக்கியது ஏன்.?
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலிக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜி நீக்கத்திற்கான காரணத்தையும் பட்டியலிட்டுள்ளார். அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜி மீது ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகள் உள்ளன, செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், செந்தில்பாலாஜி வழக்கில் அமைச்சர் பதவி காப்பாற்றும் கவசமாக அமைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்
செந்தில்பாலாஜி அமைச்சர் என்பதால் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரவில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. செந்தில்பாலாஜி அமமுக சென்ற காலகட்டத்தில் மட்டுமே விசாரணை நடைபெற்றது. புதிய ஆட்சியில் அமைச்சராகாவிட்டால், மனுதாரர்கள் சமரசமாகி இருப்பார்களா என்பது சந்தேகத்தையும் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. பதவி, அதிகாரத்தால் செந்தில்பாலாஜியை நெருங்க விசாரணை அதிகாரிகள் தயக்கம் காட்டியுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற கருத்துகள்படி, செந்தில்பாலாஜி அமைச்சரவை பதவி நியாயமான விசாரணையை அனுமதிக்காது, ஏற்கனவே, மே.31ல் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
செந்தில் பாலாஜி கைது - காரணம் சொல்லவில்லை
முதல்வர் ஸ்டாலின் கோபமாக பதிலளித்ததோடு, தனது ஆலோசனை சரியான முறையில் அணுகவில்லை. ஜூன்15ல் செந்தில்பாலாஜியின் இலாகாக்களை மாற்ற கோரிய போதும், உடல்நிலை மட்டுமே காரணமாக சொல்லப்பட்டது. அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிடவில்லை. ஜூன் 16ல் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க மீண்டும் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதனை ஏற்கவில்லையென தெரிவித்தார், இலாகாக இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடருவது அவருக்கு கூடுதல் பலம். கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம்.
முதலமைச்சர் பாரபட்சம்
ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை பறிக்கப்பட்டன. சாதாரண காலங்களில், அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் தற்போது, செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் நீடிக்க செய்வது முதல்வர் பாரபட்சத்தை காட்டுகிறது. அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்ந்தால் விசாரணையை பாதிக்கும் என தெரிவித்துள்ளவர், அரசமைப்பு செயல்பாட்டை முடங்கும்" அரசமைப்பு சட்டம் 154, 163, 164 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலனிக்கு எழுதிய கடிதத்தில் தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
- DMK News
- Governor Ravi letter to Chief Minister
- Senthil Balaji dismissal row
- TN Governor RN Ravi Letters
- senthil balaji arrest case
- senthil balaji case updates
- senthil balaji chenani hc
- senthil balaji high court
- senthil balaji news
- senthil balaji wife
- senthil baljai today news
- Minsiter Senthil Balaji ED Arrest