The government took no action on any item on the fishermen issue - CPI condemns

தமிழக மீனவர்கள் தாக்குப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார்.

இலங்கை அரசின் இத்தகைய கொடூர செயலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

இந்திய கடற்பகுதியில் நிராயுதபாணியாக மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை எந்த வித காரணமும் இன்றி இலங்கை கடற்படையினர் சுட்டுகொன்றுள்ளனர்.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ள வில்லை.

படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடுமப்த்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்.

மீனவர் பிரச்சனையில் நிரந்திர முற்றுபுள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.