The government should state all the damage caused by the okay storm in Kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு முழுவதையும் அரசு கூற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரியுள்ள ரூ. 13,520 கோடி புயல் நிவாரண நிதியையும் அரசு பெறவேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 30 ஆம் தேதி கன்னியாக்குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் காரணமாக பெரு சேதம் ஏற்பட்டது. 

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது. இதில் விசைப்படகுகள் மூலம் ஆழ் கடலுக்குள் பல நாட்களுக்கு முன்பே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர். 

இதனால் அந்த மீனவ குடும்பத்தினர் மீனவர்கள் நிலைமை என்ன என்பது தெரியாமல் பதட்டமடைந்தனர். மீனவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கையும் விடுத்து வந்தனர். 

இதையடுத்து ஓகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். 

ஓகி புயலால் கடுமையான பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கும் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதனிடையே ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கிக் கூறினார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 4047 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு தமிழகத்தில் 400, கேரளாவில் 261 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 661 மீனவர்களை கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு முழுவதையும் அரசு கூற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரியுள்ள ரூ. 13,520 கோடி புயல் நிவாரண நிதியையும் அரசு பெறவேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.