Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசு வழங்கியுள்ள ரு1000 ல் சிலிண்டர் 850 போக மீதியுள்ள 150ல் எந்த அமைச்சராவது குடும்பம் நடத்த முடியுமா

கொரோனா வைரஸ் கொன்று விடுவதைவிட அரசு கொன்றுவிடும் என்ற பயம் மக்களிடம் இருந்து வருகிறது. தமிழக அரசு வழங்கியுள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு 850 போக மீதியுள்ள 150-யை வைத்து எந்த ஒரு அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் குடும்பம் நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை. பால், மருந்து வாங்க பணம் இல்லாமல் மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.என்று கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

The government of Tamil Nadu has given a cylinder Of the remaining 150 to go to 850, can any family minister
Author
Karur, First Published May 14, 2020, 10:50 PM IST

கொரோனா வைரஸ் கொன்று விடுவதைவிட அரசு கொன்றுவிடும் என்ற பயம் மக்களிடம் இருந்து வருகிறது. தமிழக அரசு வழங்கியுள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு 850 போக மீதியுள்ள 150-யை வைத்து எந்த ஒரு அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் குடும்பம் நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை. பால், மருந்து வாங்க பணம் இல்லாமல் மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.என்று கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

The government of Tamil Nadu has given a cylinder Of the remaining 150 to go to 850, can any family minister

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட கீழையூர் காலணி மற்றும் கீரணிப்பட்டி ஆகிய பகுதிகளில் பார்வையிட்ட கரூர் எம்பி எஸ்.ஜோதிமணி, அப்பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோதிமணி, ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் பசியிலும், வறுமையிலும் வாடிவருவது மனம் வெடித்து விடுவது போல் உள்ளது. தமிழக அரசு அளித்துள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு 850 போக மீதியுள்ள 150-யை வைத்து எந்த ஒரு அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் குடும்பம் நடத்த முடியுமா என்பது தெரியவில்லை. பால், மருந்து வாங்க பணம் இல்லாமல் மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

The government of Tamil Nadu has given a cylinder Of the remaining 150 to go to 850, can any family minister

கொரோனாவை விட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது.  அரசு மக்களிடம் அன்பும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்றும்,  உண்மையில் மக்கள் மீதும், பொருளாதார மீட்டெடுப்பதில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்தால், ஏழை எளிய, விவசாய மக்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ7500 வீதம் மூன்று மாதத்திற்கான தொகையை செலுத்த வேண்டும். மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையை - ஜி.எஸ்.டி உள்ளிட்ட தொகையை கொடுக்க வேண்டும். 2 லட்சம் கோடி தொகை பாக்கி உள்ளது. மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விழைவித்து வருகிறது. மத்திய அரசு பிரதம மந்திரி நிவாரண நிதியை விட்டுவிட்டு பி.எம். கேர் தொடங்கி நூதனமான ஊழலில் ஈடுபட்டுள்ளது. கொரோனா கொன்று விடுவதைவிட அரசு கொன்றுவிடும் என்ற பயம் மக்களிடம் இருந்து வருகிறது என்றும் பேட்டியளித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios