The government hides the dengue effect

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் பாதிப்பை அரசு மூடி மறைப்பதாக திமுகவின் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளா.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் டெங்கு பாதிப்பை அரசு மூடி மறைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் அரசு விழாக்களில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது சரியான செயல் அல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனநாயக மரபுகளைக் காக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சை நிலவ அதிமுகவில் வெளிப்படைத் தன்மை இல்லாததே காரணம் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.