தனது உதவியாளரின் மனைவியை நகை வியாபாரி உல்லாசத்திற்கு அழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள ரேணிகுண்டாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தனது உதவியாளரின் மனைவியை நகை வியாபாரி உல்லாசத்திற்கு அழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள ரேணிகுண்டாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது. இன்னும் சில கொடியவர்கள் ஆடு, மாடு, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களையும் பாலியல் வன்புணர்வு செய்யும் கொடுமைகள் அரங்கேறி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வரிசையில் நகைக்கடை வியாபாரி ஒருவர் தன்னிடம் வேலை செய்யும் உதவியாளரின் மனைவியை உடலுறவுக்கு அழைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலர் பெரிய மனிதர்கள் போர்வையில் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது இதன்மூலம் தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணி குண்டாவைச் சேர்ந்தவர் நேம் சந்த், இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் உதவியாளராக இருக்கும் மனைவியின் மீது இவருக்கு காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று துடித்தார். இந்நிலையில் ஒருநாள் அவரின் உதவியாளருக்கு போன் செய்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் எனவே உங்கள் மனைவியை அனுப்பி வையுங்கள் என கோரினார். அவரது உதவியாளரும் முதலாளி அழைக்கிறாரே என்பதற்காக தனது மனைவியை வியாபாரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அவரது மனைவி, முதலாளியின் வீட்டுக்கு செல்ல தயங்கினார், உங்கள் முதலாளி வீட்டில் தனியாக இருக்கும் போது நான் எப்படி அங்கு செல்வது என தனது கணவனிடம் கேட்டார், அதற்கு அவர் எங்கள் முதலாலி நமக்கு தந்தையை போன்றவர், அதனால் தயங்காமல் சென்று வா என கணவர் அனுப்பி வைத்தார். இதனால் அந்தப் பெண்ணும் முதலாளியின் வீட்டுக்கு சென்றார், அங்கு சென்ற சிறிது நேரத்தில் முதலாளி நேம் சந்த் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து படுக்கையில் அமர வைத்ததுடன், நீ என்னுடன் சிறிது நேரம் இருக்க வேண்டும், உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன். இந்த வீட்டில் இருக்கிற எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள், உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் தனியாக செலவிட வேண்டும். உன்னையும் உனது குடும்பத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என அந்தப் பெண்ணை படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது, பின்னர் இதை யாரிடமும் கூற வேண்டாம் என நகைக் கடை வியாபாரி நேம் சந்த் கெஞ்சினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ரேணிகுண்டாவில் உள்ள மார்வாடி சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார், மார்வாடி சமுதாய தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்று திருப்பதி எஸ்பியிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நேம் சந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.