The general secretary of the election commission is vacant - O. Panneerselvam sudden information
அதிமுகவில் யாரும் பொது செயலாளர் இல்லை. இதுவரை பொது செயலாளர் பதவி காலியாவே இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
டெல்லியில் செய்தியளாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வளைதளத்தில் அதிமுக கட்சியில் பொது செயலாளர் பதவி காலியாகவே இருக்கிறது. அதில், யார் பொது செயலாளர் என குறிப்பிடவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அந்த பதவியில் யாரும் இல்லை. அவருக்கு பின்னர், அந்த பணியை செய்ய பொருளளார், அவை தலைவர் மட்டுமே செய்ய வேண்டும். அதுதான் கட்சியின் சட்டவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்தது செல்லாதது. பொதுக்குழு, செயற்குழு கூடி அவரை நியமனம் செய்தது யாரும் ஏற்க முடியாது. இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.
அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு விதியில் மட்டுமே பொது செயலளரை நியமிக்கப்பட வேண்டும் அதுதான் கட்சியின் விதி. இதனால், அதிமுகவில் சசிகலா பணியாற்றுவதற்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
