500 கோடி ரூபாய் மதிப்பிலான 3பாக பெண் சூப்பர் ஹீரோ ப்ராஜெக்டைத் தயாரிப்பதாக ஜாக்குலினிடம், சுகேஷ் கூறியதாக ஒரு ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப்புது விவரங்களை தெரிவித்து வருவதால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
அவரது சமீபத்திய அறிக்கையின்படி, சுகேஷ், ஜாக்குலினுக்கு ஆடம்பரமான பொருட்களை பரிசளித்ததோடு மட்டுமல்லாமல், ஜாக்குலின் நடிக்கும் படங்களையும், தயாரிப்பதாக உறுதியளித்தார். 500 கோடி ரூபாய் மதிப்பிலான 3பாக பெண் சூப்பர் ஹீரோ ப்ராஜெக்டைத் தயாரிப்பதாக ஜாக்குலினிடம், சுகேஷ் கூறியதாக ஒரு ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜாக்குலின் பாலிவுட்டில் வாய்ய்ப்புகள் அமையாததை நன்றாக தெரிந்து கொண்ட சுகேஷ் தெரிந்து கொண்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுகேஷ், ஜாக்குலினை மேலும் கவர்ந்து விட்டார். அவர் அளித்துள்ள வாக்குறுதியில், ’’ ஹாலிவுட்வி.எஃப்.எக்ஸ் கலைஞர்களை உள்ளடக்கிய இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோயின் திட்டத்தை அவரை வைத்து தயாரிப்பதாக அவர் உறுதியளித்தார்.
அது உலக அளவில் படமாக்கப்படும். ஜாக்குலினிடம் அவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை ஒத்திருப்பதாகவும், அவரைச் சுற்றி உருவாக்கப்பட்ட சூப்பர் ஹீரோயின் தொடருக்கு அவர் தகுதியானவர் என்றும் அவர் ஜாக்குலினிடம் கூறியுள்ளார்.
லீனா தனது கணவர் சுகேஷ் தனக்கு செய்த தீமை, சூழ்ச்சி குறித்த ஆதாரங்களை நீக்கி, மற்றவர்களையும் மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கை எதிர்கொண்டுள்ள சந்திரசேகர், விசாரணையின் போது அமலாக்கத்துறையிடம், ஜாக்குலின் கூறியபடி $150,000க்குப் பதிலாக அமெரிக்காவில் வசிக்கும் பெர்னாண்டஸின் சகோதரி ஜெரால்டினுக்கு $180,000 பரிமாற்றம் செய்ததாகத் தெரிவித்தார்.
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் லீனா மரியா பால் ஆகியோர் டெல்லி திகார் சிறையில் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரான்பாக்ஸி விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கின் புகாரின் பேரில், தம்பதியினர் ஏற்கனவே டெல்லி போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சந்திரசேகர், அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து அதிதியிடம் தனது கணவருக்கு ஜாமீன் வழங்குவதாக கூறி ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
