வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் ஓட்டு இருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டே சசிகலாவின் பெயரை நீக்கியாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து வெளியேறியதும்  அரசியலில் பிரளயம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலும் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.