Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஊரடங்கு..? அறிவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

தமிழகம் முழுவதும் 25 ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த ஆட்சியர்கள் உடனான கூட்டத்தில் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

The first curfew in Tamil Nadu .. Edappadi Palanisamy is the Chief Minister
Author
Tamil Nadu, First Published Jun 24, 2020, 5:01 PM IST

தமிழகம் முழுவதும் 25 ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த ஆட்சியர்கள் உடனான கூட்டத்தில் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The first curfew in Tamil Nadu .. Edappadi Palanisamy is the Chief Minister

இந்தியளவில் கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.The first curfew in Tamil Nadu .. Edappadi Palanisamy is the Chief Minister

மேலும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளை மூடவும் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மாநில மக்களுக்கு மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.The first curfew in Tamil Nadu .. Edappadi Palanisamy is the Chief Minister

 அப்போது தமிழகம் முழுவதும் 25 ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த ஆட்சியர்கள் உடனான கூட்டத்தில் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதை அறிவிக்க உள்ளார். 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மண்டல முறை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios