Asianet News TamilAsianet News Tamil

கிறிஸ்தவ மதம் பரப்ப செய்த வெறியாட்டம்.. இந்து ஆலயத்தில் உடலை புதைத்து கட்டப்பட்ட சர்ச்..!?

தோமா இந்தியா வந்தான் அதுவும் சென்னையில் கொல்லபட்டான். சாந்தோமில் மரித்தான் என்ற கட்டுகதையில் இருந்து தொடங்குகின்றது.

The fanaticism that spread Christianity .. The church built by burying the body in the Hindu temple ..!?
Author
Tamil Nadu, First Published Nov 10, 2021, 4:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தெய்வ நம்பிக்கையும், தேசப்பக்தியும் நிறைந்த தமிழர்களை மதமாற்றுவது என்பது கிருஸ்தவ, முஸ்லீம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு மிக சவாலாக உள்ளது. தமிழர்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவர்களது தெய்வ நம்பிக்கையை சிதைக்க வேண்டும். இந்துக்கள் வேறு, தமிழர்கள் வேறு என்ற எண்ணத்தை பதிய வைக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வில் அருகு போல் வேறூன்றியிருக்கும் இந்து பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதற்காக கிருஸ்தவ ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆரிய-திராவிட இனவாத கட்டுக்கதையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. மாறாக புதிய புதிய வடிவில் தமிழர்களின் ஆன்மீகத்தை சிதைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.The fanaticism that spread Christianity .. The church built by burying the body in the Hindu temple ..!?

இந்நிலையில், இயேசு வந்த கதை பற்றி எழுத்தாளர் ஸ்டேன்லி ராஜன் விரிவாக விளக்கியுள்ளார். ‘’நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, யாரும் நமக்கு எதிரியும் அல்ல. யாரையும் சீண்ட‌ வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. ஆனால், வரலாறுகள் திருத்தபடக் கூடாது. வரலாற்றை திருட்டுதனமாக திருத்தி இடைசெருகி அதனால் தேசவிரோத காரியங்கள், இந்திய கலாச்சார வரலாறுகள், ஞானமரபுகள் திரிக்கபட்டுவிட கூடாது என்றுதான் அஞ்சுகின்றோம்.

இதனாலேதான் இந்த வள்ளுவன் கிறிஸ்தவன், இந்தியா தோமாவழி கிறிஸ்துவநாடு என்பதையெல்லாம் நாம் கண்டிக்கின்றோம். அவையெல்லாம் வறட்டு சிந்தாந்தத்தின் விபரீத கற்பனைகள். திட்டமிட்ட சதிகள்.
இவைகளின் மூலகாரணம் தோமா இந்தியா வந்தான் அதுவும் சென்னையில் கொல்லபட்டான். சாந்தோமில் மரித்தான் என்ற கட்டுகதையில் இருந்து தொடங்குகின்றது.

தோமா, இயேசுநாதர் காலத்து ஆசாமி. அவ்வகையில் அவனின் காலம் 2000 ஆண்டுக்கு முந்தையது. ஆனால் 1400 ஆண்டுகளாக அவனை பற்றி தமிழகத்தில் இந்தியாவில் யாருக்கும் தெரியாது, 1500ல் போர்த்துகீசியர் வந்துதான் தோமா எனும் பெயரை சொல்லி, சென்னையில் அவன் வாழ்ந்தான் என திடீர் வரலாற்றை சொல்லி தாமஸ் மவுண்ட், சாந்தோம் என அடையாளமிடுகின்றார்கள். காலம் காலமாக இல்லாத ஒன்றை அதுவும் 1500 ஆண்டுகளாக தோமா எனும் பெயரே இல்லாத இடம் ஒன்றை திடீரென தோமாவின் அடையாளம் என போர்த்துகீசியர் மாற்றிவைத்து தோமா என்பவன் இயேசுவின் சீடர்களில் ஒருவன், ஆனால் மிகபெரிய சந்தேகபிராணி, இயேசுவோடு இருந்தாலும் அவரிடம் தாமரை இலையில் நீர்போலத்தான் இருந்தான்.The fanaticism that spread Christianity .. The church built by burying the body in the Hindu temple ..!?

இயேசு சிலுவையில் அறையபட்ட்ட பின் அவன் நம்பிக்கை போயிற்று. ஆனாலும் இயேசு மரித்தபின்னும் அவனுக்கு தரிசனமாகி தன் காயம்பட்ட உடலை காட்டியதில் அவன் மறுபடியும் இயேசுவினை நம்பியதாக பைபிள் சொல்கின்றது.
அதாவது இப்பொழுது இருக்கும் பைபிள் சொல்கின்றது. ஆனால், அவன் இயேசு காட்சி கொடுத்தபின் என்ன ஆனான் என்றோ, எங்கே சென்றான் என்றோ பைபிளும் சொல்லவில்லை, ரோமை வாடிகன் திருச்சபையும் ஆதாரபூர்வமாக எதையும் சொல்லவே இல்லை.

காரணம் கிறிஸ்துவமே இயேசுவுக்கு பின் 400 வருடம் கழித்துத்தான் முறைபடுத்தபட்டது. பலவடிவ பைபிள்கள் இருந்தன‌. அதில் யூதாஸின் எழுத்தும் இருந்தது. தோமாவின் எழுத்தும், வரலாறும் இருந்தது. இன்னும் என்னவெல்லாமோ இருந்தது. அதிலும் தோமா இந்தியா வந்ததாக வரி இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அதை மறைக்கும் அவசியம் இருந்திருக்காது.
அந்த பல நூறு பைபிள்களில் எதெல்லாம் சர்ச்சையாகுமோ அதையெல்லாம் கிழித்துவிட்டு எதை சொல்லி மக்களை மூளைசலவை செய்யமுடியுமோ அதைமட்டும் சேர்த்து, ஒரே பைபிளாக லத்தீனில் ஆக்கிவிட்டார்கள்.

அதிலும்  தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று. அதிலும், இன்றிருக்கும் பைபிளும் அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது. ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை.The fanaticism that spread Christianity .. The church built by burying the body in the Hindu temple ..!?

கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான். எதையுமே வித்தியாசமாக நோக்கும் சிந்தனை அவனுடையது. இயேசு உயிர்த்ததை நம்பாத அளவு பகுத்தறிவாளனாக இருந்திருக்கின்றான். பின் இயேசு வந்து அவனை நம்ப வைத்திருக்கின்றார். தோமா எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு. அது வில்லங்கமானது என்பதால் மறைத்துவிட்டார்கள்.

அந்த தோமா ஒரு சீட கூட்டத்தை வைத்திருந்தான். அது தோமா வழி கிறிஸ்தவமானது. கேரளாவுக்கும், அரேபியாவுக்கும் எக்காலமும் தொடர்பு என்பதால் அன்றே தோமாவழி கிறிஸ்தவம் கேரளாவுக்கு வந்தது. இயேசுவுக்கு பின் கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு பின் இவை கேரளாவுக்கு வந்தன‌. சிரிய கிறிஸ்தவம், தோமாவழி கிறிஸ்தவம் எல்லாம் கேரளாவுக்கு வந்தன. யூதர் கேரளாவில் வசித்தது போல அவர்களும் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் சத்தமின்றி இருந்தார்கள்.

ஆம்... யூதர் கிபி 70ம் ஆண்டில் ஜெருசலேம் ஆலயம் இடிக்கபட்ட கலவரத்தில் கொச்சிக்கு வந்தார்கள். இன்றும் அவர்கள் பரம்பரையும் அடையாளமும் கொச்சியில் உண்டு. அரேபிய கேரள தொடர்புகள் அப்படியாவனை. பின்பு இஸ்லாமும் அப்படியே 7ம் நூற்றாண்டில் வந்தது. பாரத கண்டத்தில் இஸ்லாம் கால்வைத்த முதல் இடம் கேரளம்தான். ஆனால் சிறிய அளவில்தான் அது இருந்தது.

வாஸ்கோடகாமா எனும் போர்த்துகீசியன் 15ம் நூற்றாண்டில் கேரளாவின் கள்ளிகோட்டையில் கால்வைத்ததில் இருந்து இங்கு கிறிஸ்தவ காலணியாக்கமும் மதமாற்றமும் தொடங்கியது. கேரளாவில் கள்ளிகோட்டை பக்கம் அதை போர்த்துகீசியர் செய்ய, வாஸ்கோடகாமா கடும் எதிர்ப்பினை சம்பாதித்து கள்ளிகோட்டையில் கொல்லவும் பட்டான்.

வாஸ்கோடகாமா கொல்லபட்ட பின்பு போர்த்துகீசியர் கோவா பக்கம் சென்றனர். அங்கிருந்து மங்களூர் வரை தங்கள் சாம்ராஜ்யத்தை நீட்டிக்க போராடினர். முதலில் சிவாஜி அவர்களை அடக்கி வைத்தான். அவனுக்கு பின்னால் மராட்டியருக்கும், மொகலாயருக்குமான தீரா போர் குழப்பத்தில் போர்த்துகீசியர் வாள்முனை துப்பாக்கி முனையில் கடும் மதமாற்றம் செய்த சாட்சிகள் வரலாற்றில் உண்டு. அவை அவுரங்கசீப் காலத்தை விட பயங்கரமான ரத்த சரித்திரம்.

ஆனாலும் கோவானினை தாண்டி போர்ச்சுகீசிய கோஷ்டியால் கால்வைக்க முடியவில்லை. சிவாஜி எரியவிட்ட இந்து நெருப்பு அப்படி இருந்தது. (பிரான்சிஸ் சவேரியார் வந்ததெல்லாம் அப்பொழுதுதான். வடக்கே நிலைமை சிக்கலாக அவர் தன் ஜாகையினை தென்னகதிற்கும் இலங்கைக்கும் கிழக்காசியாவுக்கும் மாற்றி கொண்டார்.

ஆம், வடக்கே எதிர்ப்பு அப்படி இருந்திருக்கின்றது. போர்த்துகீசிய மதமாற்ற கொடுமைகளும், ஆக்கிரமிப்பும் மகா கொடியதாக இருந்திருக்கின்றது. நம்ம ஊர் வேலுநாச்சியர் போல, மங்களூர் பக்கம் அப்பாக்கா என்பவள் 15ம் நூற்றாண்டிலே அவர்களை ஓட அடித்திருக்கின்றாள். பெரும் எதிர்ப்பு வந்தபின் போர்த்துகீசிய கோஷ்டி அடங்கியது. இதன் பின் சில இடங்களில் மட்டும் துறைமுகம் பக்கம் சமத்தாக வியாபாரம் பார்த்திருக்கின்றது போர்த்துகீசிய கோஷ்டி. அன்று பிரான்ஸ், பிரிட்டன், டச்சு கம்பெனி எல்லாம் இந்தியாவுக்கு வரவில்லை)

தென்னகத்தில் ஆளில்லா கடற்கரை பகுதியில் சிறிய கோட்டையும், வியாபாரமும் செய்தபடி சில இடங்களில் அது கால்பதித்தது, அப்படி சென்னை பக்கமும் வந்தது. கோவாவுக்கு அடுத்தபடியாக சென்னை அவர்களின் முக்கிய கேந்திரமாக இருந்தது. அன்று அது சென்னை அல்ல. மாறாக போர்த்துகீசியரான மெட்ரூஸ் என்பவன் சமாதி இருந்த இடத்தை மெட்ராஸ் என அழைத்தனர்.The fanaticism that spread Christianity .. The church built by burying the body in the Hindu temple ..!?

அப்பொழுது கிறிஸ்தவம் போர்த்துகீசிய பகுதியான மெட்ராஸுக்கு கோவா போலவே ஊடுருவிற்று. அதில் தோமா வழி கிறிஸ்தவர்களும் உள்ளே வந்தார்கள். கோவாவில் போர்த்துகீசியர், கிறிஸ்தவமதம் பரப்ப செய்த வெறியாட்டம் மகா கொடுமையானது. எனினும் அவர்களுக்கு முழு வெற்றியில்லை.

அப்படி சென்னையிலும் சில முயற்சிகள் நடந்தன. அப்பொழுது ஒரு கிறிஸ்தவ துறவி கொல்லபட்டிருக்கலாம். இந்து கோவிலை அழித்து அவன் கல்லறை அங்கே நிறுவபட்டிருக்கலாம். போர்த்துகீசியரின் கல்லறைகள் தனியே அமைக்கபடுவதில்லை. கோட்டைகள், சர்சுகள் என புதைக்கும் வழக்கம் கொண்ட அவர்கள் இந்து ஆலயத்தில் உடலை புதைத்து அதை சர்சாக்கியிருக்கலாம். அதை தூய ஆலயம் என அடையாளமிட்டு, போர்த்துகீசிய மொழியில் சாந்தோ ஆக்கியிருக்கலாம்.

ஸ்டேன்லி ராஜனின் பதிவை தொடர இங்கே க்ளிக் செய்யவும்... மிஷனரிகளுக்கு பின்னால் திரியும் தமிழக கைகூலிகள்... நிலைக்க வைக்க புரட்டுக்கதைகள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios