Asianet News TamilAsianet News Tamil

மிஷனரிகளுக்கு பின்னால் திரியும் தமிழக கைகூலிகள்... நிலைக்க வைக்க புரட்டுக்கதைகள்..!

பரங்கி மலையும், சாந்தோம் ஆலயமுமே எல்லா குபிர் மிஷனரிகளுக்கும் அவர்கள் பின்னால் திரியும் தமிழக கைகூலிகளுக்கும் தொடக்கபுள்ளி.

mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!
Author
Tamil Nadu, First Published Nov 10, 2021, 4:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கிறிஸ்தவமதம் பரப்ப செய்த வெறியாட்டம்.. இந்து ஆலயத்தில் உடலை புதைத்து அதை சர்ச்..!?  பதிவின் தொடர்ச்சி இங்கே... 

செயின்ட் எனும் ஆங்கில சொல் போர்த்துகீசிய மொழியில் சாந்தோ என மாறும், செயின்ட் நிக்கோலஸ் சாந்தா கிளாஸ் ஆனது, செயின்ட் குரூஸ் சாந்தா குருஸ் ஆனது போல செயின்ட் ஆலயம் சாந்தா ஆலயம் ஆனது. பின்பு சாந்தோம் ஆனது.
இவை எல்லாம் 15ம் நூற்றாண்டு சம்பவங்கள். இதனால் சென்னை பரங்கிமலை ஆலயம் சென்னை சாந்தோமின் பழமை 500 ஆண்டுகளை தாண்டாது.mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!

இப்படி மெட்ராஸ் பக்கம் நடமாடிய போர்த்துகீசியர் கொழும்பு மலாக்கா என ரவுண்ட் அடித்தனர். அப்படி ஒரு நேரம் பயணிக்கும்பொழுதுதான் வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி அங்கு ஆலயம் அமைத்தனர். இப்படியாக அவர்கள் தென் கடற்கரை எல்லாம் ஆடிபாடி திரிந்து ஆலயம் கட்டுவதும் மகிழ்வதுமாக இருந்தனர். இன்றும் தென்னக கடற்கரை கிறிஸ்தவ பெயர்கள் போர்த்துகீசிய பெயர்களாகவே இருக்கும்.

நெல்லை மாவட்ட வடக்கன்குளம் ஆலயம் கூட போர்த்துகீஸ் காலத்தில் தொடங்கபட்டதே. பின்பு 16ம் நூற்றாண்டில் பிரிட்டானியர் வந்து போர்த்துகீசியரை மெட்ராஸில் இருந்து அடித்துவிரட்டி ஜார்ஜ் கோட்டையினை கட்டி வலுவாக காலூன்றினர். அதன் பின் தமிழகத்தில் இருந்து விடைபெற்ற போர்த்துகீசிய கோஷ்டி கோவாவிலே அடைக்கலமானது.mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!

அங்கு அவர்கள் மேலும் ராஜ்யத்தை விரிக்க எண்ணினர். மாவீரர் சிவாஜி அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தான். பின்னாளில் அவன் வீழ்ச்சிக்கு பின் பிரிட்டானியர் போர்த்துகீசியரை முழங்காலில் நிறுத்தினர். சுதந்திர இந்தியாவில் பட்டேல் கோவாவினை இணைக்க முயன்றபொழுது நேரு தடுத்தார். ஆம் கோவா இங்கு கத்தோலிக்க தலைமை பீடமாக இருக்க ஐரோப்பா விரும்பியது, நேரு அதை மனமுவந்து செய்தார்.

பின் 1962ல் சீன யுத்தின் பொழுது எழுந்த அதிருப்திகாரணமாகவே கோவா இந்தியாவோடு இணைக்கபட்டது, அதுவும் நேருவின் அரைகுறை மனதோடு. இதுதான் போர்த்துகீசியர் இந்தியாவில் ஆண்ட வரலாறு. அவர்கள் சென்னையினையும் கொஞ்சகாலம் ஆண்டனர். அப்பொழுதுதான் பரங்கிமலை, சின்னமலை, சாந்தோம் எல்லாம் உருவாயின‌. 

கோவா போல மதராஸையும் முழு கிறிஸ்தவ பூமியாக்க அவர்கள் விரும்பினர். அதற்கு சில வலுவான ஆதாரங்களை உருவாக்க தோமையார் பரங்கிமலையில் மரித்து சாந்தோமில் அடக்கம் செய்யபட்டார் என கதை கிளப்பினர். அந்த புரட்டுகதை இக்காலம் வரை நிலைத்திருக்கின்றது.mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!

ஆனால் கோவா போல் சென்னை முழுவதும் மாறவில்லை. அதற்கு ஏகபட்ட காரணங்கள் உண்டு. முதல் காரணம் சென்னையில் அடையாளமிட்டு இருந்த இந்து ஆலயங்கள். ஆம் கிராமங்களும், சிறிய நகரங்களுமாக இருந்த அன்றைய சென்னையில் இருந்த பெரும் ஆலயங்கள் சென்னையின் தன்மையினை அன்று காத்தன. இரண்டாம் காரணம் வியாபாரத்தை மட்டும் கவனித்த பிரிட்டிஷ்காரன், அதாவது கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ்காரன், (மிஷனரி குழப்பமெல்லாம் பிரிட்டன் அரசிடம் இந்தியா சென்றபின்புதான் தலைவிரித்து போட்டு ஆட தொடங்கின. அது நேருவின் புண்ணியத்தால் இன்னும் ஆடிகொண்டிருக்கின்றது விரைவில் அடக்கம் செய்யப்படும்)

இதனால் சொல்கின்றோம். செயின்ட் தாமஸ் மலை, சாந்தோம் ஆலயம் எல்லாம் தோமாவின் அடையாளமே அல்ல. அவன் இந்தியா வரவே இல்லை. பைபிளில் பரிசுத்த ஆவி அப்போஸ்தர் கிழக்கே செல்ல கூடாது. மேற்கேதான் செல்ல வேண்டும் என பவுல் என்பவனுக்கு உத்தரவிட்ட பின் அனைத்து அப்போஸ்தலரும் மேற்கேதான் சென்றனர். இதில் தோமா மட்டும் எப்படி கிழக்கே வந்திருக்க முடியும்? அப்படி வந்தால் அவன் பரிசுத்த ஆவியின் கட்டளையினை மீறியவன் இல்லையா?

இதை இப்படி நோக்கலாம். இயேசு பிறந்தபொழுது கிழக்கே இருந்துதான் ஞானிகள் சென்றார்கள். ஆம் இங்கு ஞானமும், அறிவும், தெளிவும், தத்துவமும், சனாதன‌ மதமுமான நல்ல‌ மார்க்கமும் இருந்தது. இதனால் கிழக்கே கிறிஸ்தவ போதகர்கள் வர பரிசுத்த ஆவி அனுமதிக்கவில்லை. ஐரோப்பா எனும் அன்றைய காட்டுமிராண்டி தேசத்துக்கே சில விஷயங்கள் தேவைபட்டன‌. வாழும் பொழுது இயேசு தன் போதனையிலே சொன்னார் "மருத்துவன் நோய் அற்றவனுக்கு அன்று, நோய் உற்றவனுக்கே தேவை"mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!

இதனால் கிறிஸ்தவ அப்போஸ்தலர்களை அந்த தெய்வம் ஐரோப்பாவுக்கு அனுப்பியது . ஆம் இந்துமதத்தின் ஒரு பாதிப்பு கிறிஸ்துவில் தெரிந்தது. இயேசு ஒரு சித்தரின் சாயல். அதுதான் ஐரோப்பாவுக்கு அவர் வழி செல்ல தெய்வம் வழிகாட்டியது. பின் அவர்கள் நமக்கே வந்து "ஹூ இஸ் காட்" என்பதெல்லாம் காலத்தின் கோலம். இயேசு பிறந்தபொழுது நட்சத்திரம் கணித்து சென்று பார்க்கும் அளவு அன்றே இத்தேசம் மிகபெரும் அறிவில் இருந்தது. இதனால்தான் பரிசுத்த ஆவி அப்போஸ்தலரை கிழக்கே அனுப்பாமல் மேற்கே அனுப்பியது. இதனால் தோமா இந்தியா வந்தார். சைவம் வைணவம் அவர் வழி, திருக்குறள் அவர் சொன்னது என எவனும் சொன்னால் அவனிடம் பேசாதீர்கள்.

இயேசுவுக்கு முன்பே "அன்பே சிவம்" என உரக்க சொன்ன பூமி இது. அதைத்தான் அன்பே கடவுள் என போதித்தார் இயேசு. இதனால் உறுதியாக சொல்லலாம், விஷயம் இங்கிருந்து அங்கு சென்றதே தவிர, அங்கிருந்தெல்லாம் இங்கு வரவில்லை. இந்துமதத்தின் அடி நாதம் மேற்கே பரவி அது யூதேயாவில் உருமாறி ஐரோப்பாவுக்கு சென்று, பின் இந்தியாவுக்கே புதிய லேபலில் கிறிஸ்தவம் என வந்தது. அவ்வளவுதான் விஷயம்.mercenaries roaming behind the missionaries ... flipping stories to keep them alive ..!

(பைபிளின் எந்த இடத்திலும் தோமா ஈட்டி தூக்கிய செய்தி இல்லை. அவன் இயேசுவின் ஈட்டி எறியும் படையிலும் இல்லை. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மட்டும் அவன் ஈட்டி ஏந்தி நிற்பதெல்லாம் சந்தி சிரிக்கும் காமெடி. ஆனால் தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது எளிது என போர்த்துகீசியனுக்கு தெரிந்து அழகாய் அரைத்தான் . அதை அவனின் அடிபொடிகள் இன்றுவரை அரைத்துகொண்டிருக்கின்றன. இனி அந்த மிளகாயினை எடுத்து அவர்கள் கண்களில் பூசும் திருபணியினை நாம் செய்ய வேண்டும். 

பரங்கி மலையும், சாந்தோம் ஆலயமுமே எல்லா குபிர் மிஷனரிகளுக்கும் அவர்கள் பின்னால் திரியும் தமிழக கைகூலிகளுக்கும் தொடக்கபுள்ளி. அதனை முறையான ஆய்வுக்குட்படுத்தினால் இவர்கள் தானாக அடங்குவார்கள் )

இதன் முந்தைய தொடக்கத்தை படிக்க:- கிறிஸ்தவ மதம் பரப்ப செய்த வெறியாட்டம்.. இந்து ஆலயத்தில் உடலை புதைத்து கட்டப்பட்ட சர்ச்..!?
 

Follow Us:
Download App:
  • android
  • ios