50 ஆண்டு காலம் திராவிடத்தை தாங்கியவர் கருணாநிதி எனவும் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கருணாநிதிதான் எனவும் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் இன்று இரண்டாவது நாளாக மாநாட்டில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் காவிரி மேற்பார்வை ஆணையத்தை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர், விழாவில் பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், 50 ஆண்டு காலம் திராவிடத்தை தாங்கியவர் கருணாநிதி எனவும் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கருணாநிதிதான் எனவும் புகழாரம் சூட்டினார். 

ஆளுங்கட்சிகளை குறை சொல்வது மட்டும் எதிர்கட்சிகளின் வேலை இல்லை எனவும் தேவைப்பட்டால் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.