எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கோவை, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. அதேபோல் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் பெரியார் சிலையை அவமானப்படுத்தியது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாரத் சேனா கோவை மாவட்ட பொதுசெயலாளர் ஒருவர் தானே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதாக சரணடைந்தார். ஆனாலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #பெரியாராவது_ மயிராவது என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘’எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது'’ என தமிழில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.