மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற அடிப்படையில் வேல்யாத்திரைக்கு அனுமதி இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

விருதுநகரில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கையில்;- 

* பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

* ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை, திருச்சுழி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை. 

* பட்டாசு, தீப்பொறி தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தனி நல வாரியம் அமைக்கப்படும்.

* 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

* கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும். 

* எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேர்தலில் நிற்க முடியுமா என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

* கொளத்தூர் தேர்தல் வழக்கின் சூழல் மாறினால் 6 ஆண்டுக்கு ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட முடியாது. 

* அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்? மருத்துவர்களை ஸ்டாலின் குறை கூறுகிறாரா? அல்லது அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து கூறுகிறாரா? 

* அமைச்சர் மரணத்தில் என்ன மர்மம் என்பதை மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.  

* கொரோனா இறப்பில் கூட அரசியல் லாபம் பார்ப்பதா என காட்டமாக முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மீதான விரக்தியால் அரசியல் காழப்புணர்ச்சியால் ஸ்டாலின் பரப்புரை செய்கிறார். 

* அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து ஸ்டாலின் பேசுவது மனிதாபிமானமற்ற செயல். 

* துரைக்கண்ணு சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சேர்க்கப்பட்டார். அமைச்சர் சேர்க்கப்பட்ட அதே மருத்துவமனையில் இருந்த கருணாநிதி மரணமும் சந்தேகத்திற்குரியதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

* பதவி ஆசை வேண்டும் என்றால் அதற்கு மக்கள் தான் பாடம் புகட்டுவார்கள். 

* மதம்சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது என சட்டத்தின் வாயிலாகவே அறிவுறுத்துகிறோம். சட்டத்தை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாரபட்சம் காட்டப்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.