கொரோனாவுக்கு பயந்து நாம் வீட்டில் முடங்கி கிடப்பது கோழைத்தனமான, முட்டாள்தனமான செயல் என தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் தனது குழுவில் உள்ள, சோர்வடைந்தோருக்கு நம்பிக்கை தரும் வகையில் வாட்ஸ் ஆப்பில் பேசிய பேச்சு மிகப்பெரிய வெளிச்சத்தை தருகிறது. இதுகுறித்து அவர், ‘’கொரோனா வைரஸ் என்பது கோடைகாலத்தில் பரவும் அம்மை நோய் போன்றதுதான். இது ஒன்றும் உயிர்க்கொல்லி வைரஸ் கிடையாது.

அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டனில் பலர் இந்த நோயால் சாக காரணம், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதே. மேலும் அங்கு 60 வயது முதல் 80 வயதுடைய வயதானவர்கள்தான் இந்த நோயால் இறந்துள்ளனர். இது மருத்துவதுறைக்கு தெரிந்த உண்மையே. வயது முதிர்ந்த பின் சுவாசிப்பின் வேகம் குறையும். எனவே பிரச்னைகள் உருவாகும்! என்பது இயல்பு. இதனால்தான் பிராணயாமம் போன்ற மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து பரிந்துரைக்கிறோம். அப்போதுதான் நுரையீரலின் இயக்கம் விரிவடையும்.

கொரோனாவுக்கு பயந்து நாம் வீட்டில் முடங்கி கிடப்பது கோழைத்தனமான, முட்டாள்தனமான செயல். மருத்துவ துறையின் டாக்டர்களே பயந்தால், மக்களின் நிலை என்னவாகும்? மாதக்கணக்கில் வீட்டில் முடங்கிக் கிடந்தால் வெளியே போக வேண்டாமா? சாப்பிட வேண்டாமா? சம்பாதிக்க வேண்டாமா? நமக்கான வாழ்வை வாழ வேண்டாமா?

நோய் எதிர்ப்பு சக்தி கூடியதால் ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த அம்மை நோயானது இப்போது குறைந்துவிட்டது. இதுதான் கொரோனா வைரசின் நிலையும். இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் எல்லோருக்கும் கொரோனா வரும். ஆனால் தடுப்பூசி கைகொடுக்கும். இதுதான் நடைமுறை. இதை மருத்துவ துறையினர் புரிந்து கொண்டு, மக்களுக்கும் விழிப்புணர்வு தர வேண்டும்.

 நம் உணவு முறையில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் என நிறைய சேர்த்துக் கொள்கிறோம். இதனால் இயல்பாகவே நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்கிறது. எனவே கொரோனாவை கண்டு பயப்படாமல், அதை எதிர்க்கும் வீரர்களாக இருப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.