சூடுபிடித்த நாடாளுமன்றத் தேர்தல்.. தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. 17 மாவட்டங்கள் விசிட்..
திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி இக்குழு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்ளது.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள், பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7 ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், பிப்ரவரி 9 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், பிப்ரவரி 10 ஆம் தேதி காலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, இன்று பிற்பகலில் (10.02.24) திருப்பூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். திருப்பூரில் அமைந்துள்ள பப்பீஸ் ஹோட்டலில் வைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். அதில் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
திமுக துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் முத்துசாமி, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர் நல்லசிவம், திருப்பூர் வடக்கு மாவட்டச்செயலாளர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்டச்செயலாளர் பத்மநாபன், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொழிற்துறையினர், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், கோழிப் பண்ணையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளித் துறை சார்ந்த அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொறியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், மக்கள் நல மன்றங்கள், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர்.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?