The DMK goes in the absence of future ila.ganesan speach
திமுகவில் ஸ்டாலினின் உழைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், அவருக்கு பக்குவம் தேவை. எதிர்காலமே இல்லாத நிலையில் திமுக சென்று கொண்டிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இதுதொடர்பாக இல.கணேசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது அதிமுகவில் உருவாகியுள்ள கோஷ்டி பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டு, இருந்தால், நல்லதாக அமையாது. தமிழகத்தில் 4 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி கவிழ்ந்தால், திமுக ஆட்சிக்கு வந்துவிடும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாக கூறி இருக்கிறோம்.
திமுகவில் ஸ்டாலினின் உழைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், அவருக்கு பக்குவம் தேவை. எதிர்காலமே இல்லாத நிலையில் திமுக சென்று கொண்டிருக்கிறது. மாட்டு இறைச்சி விவகாரத்தில் வந் துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது அல்ல.
காவிரி பிரச்சனையில் நிரந்தர மான தீர்வை ஆணையம் எடுக்கும் முன்பாக, உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மகிழ்ச்சி அடை வேன். இந்த விஷயத்தில் மத்திய அரசின் பின்னணி எதுவும் கிடையாது. பாஜக ஆட்சியில் மாவோயிஸ்ட்டுகள் 80 சதவீதம் முடக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
