இழுபறியாக இருந்த கூட்டணிக் கணக்கை இறுதி அதிகாரப்பூர்வை அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது திமுக கூட்டணி. 

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது இடங்களும் புதுச்சேரியில் ஓரிடமுமாக மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 2 சீட்டும் இன்று ஒதுக்கப்பட்டது. இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூட்டணி குழு கறாராக தெரிவித்து விட்டதால் நாளை முன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் அக்கட்சி திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வைகோவின் மதிமுகவுக்கு இரு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐஜேகே கட்சியை சேர்ந்த பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி எனவே தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள திமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

இந்நிலையில் கொங்கு ஈஸ்வரன், முஸ்லீம் லீக், பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக கறார் காட்டி வந்த நிலையில் விசிக, மதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்க முடிவாகி இருப்பதால் திவுமாவளவனும், வைகோவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.