சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்தில் வழங்கப்பட்டிருந்த நேரத்தை விட அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாக போலீசார் அவர்களை அழைத்துச் சென்று மரணம் வரை செல்லக்கூடிய அளவிற்கு "போலீஸ்ட்ரீட்மெண்ட்" கொடுத்திருக்கிறார்கள். இது தான் அவர்கள் மரணத்திற்கு காரணம்.  இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் "இருவரும் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்

 

"பென்னிக்ஸ் மூச்சுத்திணறலால், ஜெயராஜ் உடல்நலக்குறைவால் இறந்தனர். இது தமிழக முதல்வர் அவர்களின் விளக்கம். இவர் எப்படி முதல்வரானார் என்ற பின்னணி தெரியாதவர்கூட இவ்விளக்கத்தை நம்பமாட்டார்கள். இயற்கை மரணமெனில் மூவர் பணியிடைநீக்கம், இன்ஸ்பெக்டரை கட்டாய காத்திருப்புக்கும் அனுப்பியது ஏன்? என உதயநிதி தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.