Asianet News TamilAsianet News Tamil

நான் சொன்ன டேட்டா பொய்யா இருக்கணும்... அசிங்கப்பட்டு அடங்கிப்போன உதயநிதி..!

கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The data I said must be false ... Udhayanidhi who was disgusted and subdued
Author
Tamil Nadu, First Published Aug 5, 2020, 10:21 AM IST

கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'’இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்’’ என உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறி டேட்டாவை பகிர்ந்து இருந்தார். அவர் போலியான தகவல் தருவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் உதயநிதி சொன்ன தகவல் நம்பகத்தன்மை அற்றவை. அது அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு. நாங்கள் இதனை மறுக்கிறோம் எனக் கூறியிருந்தனர். The data I said must be false ... Udhayanidhi who was disgusted and subdued

கடும் எதிப்பு கிளம்பிய நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்திருந்தார். அதனை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’அந்த செய்தி பொய்யாக இருக்கவே தானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு-தனியார் மருத்துவர்-செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும். 

 

அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நிவாரணதொகை உரியமுறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிவிக்கவேண்டும். சுகாதாரத்துறையினர் நம்பிக்கையுடன் பணியாற்ற இந்த வெளிப்படைத்தன்மை அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களின் நலனில் கழகமும் இளைஞரணியும் என்றும் அக்கறையுடன் செயல்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios